Editorial / 2020 ஜூன் 08 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு-கண்டி வீதி, யக்கல பொலிஸ் நிலையத்துக்கு அருகில், இன்று (8) காலை இடம்பெற்ற விபத்தில், 35 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பகுதியில், தவறான வழியில் பயணித்த கெப் ரக வாகனத்தை நிறுத்துவதற்காகச் சென்ற லொறியொன்று, பொலிஸ் நிலையத்தின் மதிற் சுவரை மோதியுள்ளதுடன், பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், இரண்டு மோட்டார் சைக்கிள்களை மோதியுள்ளது.
இதில் காரின் சாரதியான நிட்டம்புவ எல்லகல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபர் பலியாகியுள்ளார் என்று, யக்கல பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
22 minute ago
1 hours ago
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
15 Apr 2026