2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

விபத்தில் மூவர் காயம்

Kogilavani   / 2017 ஜூன் 11 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டனிலிருந்து நோர்வூடுக்கு பயணித்த கெப்ரக வாகனமொன்று, ஹட்டன் பொகவந்தலாவை பிரதான வீதி, நோர்வூட் தியசிரிகம பகுதியில், சனிக்கிழமை மாலை வீதியை விட்டுவிலகி சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகன சாரதியின் மனைவி மற்றும் அவரது இரு பிள்ளைகளே, விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனமொன்றை முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .