Freelancer / 2022 மார்ச் 17 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
லுணுகலை - ஹொப்டன், புளுகலை பகுதியில் விறகு சேகரிக்கச்சென்ற முதியவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் 73 வயதுடைய முதியவர் தனது வீட்டிலிருந்து விறகு சேகரிப்பதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
இவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி அயலவர்களுடன் இணைந்து ரபர்வத்தை காட்டுப்பகுதியில் தேடுதலை மேற்கொண்டனர்.
இதன்போது மாலை 6.30 மணி அளவில் வீட்டிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் ரபர்வத்தை காட்டுப்பகுதியில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனை தொடர்ந்து லுணுகலை பொலிஸாருக்கு அறிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026