2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

‘விலகல்கள் அனுஷாவைத் தோற்கடிக்காது’

Editorial   / 2020 மே 20 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ். சுஜிதா, இரா.யோகேசன்

அமரர் சந்திரசேகரனின் அரசியலில் உண்மையாக செயற்பட்டவர்களையும்  தொழிற்சங்கத்தில் தீவிரமாக செயற்பட்டவர்களையும் கட்சியிலிருந்து ஒதுக்குவதன் மூலம், அவருடைய புதல்வி அனுஷாவின் வளர்ச்சியைத் தடுத்துவிட முடியாது என்று மலையக தொழிலாளர் முன்னணியின் முன்னாள் உப தலைவரும் நிர்வாக சபை மத்திய குழு உறுப்பினருமான சு.சந்திரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர்,

மலையக மக்கள் முன்னணியின் வளர்ச்சியிலும் அமரர் சந்திரசேகரனின் அரசியலிலும் தியாகத்துடன் செயற்பட்டவர் இன்று ஒதுங்கியுள்ளார்கள் அல்லது ஒதுக்கப்பட்டுவிட்டார்கள் என்று தெரிவித்த அவர், அவரது மரணத்துக்குப் பின்னர் கட்சியின் வளர்ச்சியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது என்றும் அவருக்கு ஆதரவாக இருந்த பலர், இன்று லாவகமாக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

அனுஷாவுக்கு ஆதரவளிக்கின்றார்கள் என்ற சந்தேகத்தில், தொழிற்சங்கம் சார்ந்தவர்களுக்கும் நெருக்கடி கொடுக்கப்படுகின்றது என்று தெரிவித்த அவர், அமரர் சந்திரசேகரன் தனது அரசியலை ஆரம்பித்த போதும், இதை  விடவும் சதிகளையும் தடைகளையும் சந்தித்தார் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .