Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 04 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
கடந்த சில நாட்களாக பெய்த கடுமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
அக்கரப்பத்தனை -டயகம வெவரலி தோட்டத்தில் இன்று 04 அதிகாலை 5 மணி அளவில் லயக்குடியிருப்புக்கு பின்புறத்தில் இருந்த 15 அடி உயரம் கொண்ட மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரு வீடு பகுதி அளவில் சேதமாகியுள்ளது.
வீட்டில் இருந்த பொருட்களும் மண்ணில் புதைந்து சேதமாகி உள்ளதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இப்பகுதியில் மண்மேடு சரியக்கூடிய அபாய நிலைமையும் காணப்படும் நிலையில்,
பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து அதே குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இது தொடர்பில், தோட்ட நிர்வாகம், பிரதேச செயலகம், கிராம சேவகர் உள்ளிட்டவர்களுக்கு அறிவித்த போதிலும் இதுவரை எவரும் இவர்களை பார்வையிட வரவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago