Janu / 2024 மே 05 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் பயணித்த வேன் ஒன்று கிரிவன்நெலிய பகுதியில் உள்ள மடத்திற்கு அருகில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ,அதன் சாரதி காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ் விபத்தில் 39 வயதுடைய நிஹால் குமார என்பவரே காயமடைந்துள்ளார் .
அவர் கிறிவான்நெலிய மடத்திற்கு பக்தர்கள் குழுவொன்றை அழைத்து சென்று , அவர்களை விட்டு விட்டு திரும்ப வேனை எடுத்துச் செல்லும் போது வேன் மடத்திற்கு அருகில் உள்ள குன்றின் மீது மோதுண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார் .
மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செ.தி.பெருமாள்
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025