2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வாகனம் ஏறியதில் உறங்கியவர் பலி

Gavitha   / 2017 மார்ச் 04 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

மது அருந்திவிட்டு, பாதையில் உறங்கிக்கொண்டிருந்தவர் மீது, வாகமொன்று ஏறிச்சென்றதில், குறித்த நபர், ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இச்சம்வம், நேற்று, (03) தனமல்விலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தனமல்வில பகுதியின் கொமலிகம என்ற இடத்தில், தனது வீட்டுக்கு முன்னால், மதுபோதையில் படுத்துறங்கிய வி.எல். பேமச்சந்திர என்ற 50 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையே, இதன்போது பலியாகியுள்ளார்.

தனது தந்தை, பாதையில் இறந்து கிடப்பதைக் கண்ட மகன், தனமல்வில பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு, சட்ட மருத்துவ பரிசோதனைக்கு, தனமல்வில அரசினர் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

குறித்த நபர் மீது, வாகனத்தை ஏற்றியவர்கள் தொடர்புடைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X