Sudharshini / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையகத்தில் நிர்மானிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரமும் நேற்று (01) கைச்சாத்திட்டனர்.
இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ஐம்பதாயிரம் வீடமைப்பு திட்டத்தில், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கென 4,000 வீடுகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டன. வடக்கு, கிழக்கில் வீடமைப்பு திட்டம் செயற்படுத்தப்பட்ட நிலையிலும் அரசியல் இழுபறிநிலை காரணமாக மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிர்மாணபணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.
100 நாட்கள்; வேலைத்திட்டதில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பழனி திகாம்பரம் பொறுப்பேற்றதன் பின், இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த வீடமைப்புத் திட்டத்தினை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தினார். இதன் பயனாகவே இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன், கூட்டணியின் பிரதித்தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமானவே.வீ.இராதாகிருஷ்ணன், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பனர் வடிவேல் சுரேஸ், மத்தியமாகாண சபை உறுப்பினர் உதயகுமார், அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி, நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எல்லேகல உட்பட பலர் கலந்துகொண்டனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago