Gavitha / 2016 ஜனவரி 04 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
விபத்துக்கு காரணமான லொறியின் சாரதியொருவரை தாக்கினார்கள் என்று குற்றஞ்சாட்டப்படும் இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி-நுவரெலியா பிரதான வீதியில் கடந்த டிசெம்பர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்ற விபத்தை அடுத்து மேற்படி சாரதி மீது தாக்குதலை நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில், செல்வராஜ் பன்னீர்செல்வம் (வயது 31) மற்றும் எஸ்.பழனிசாமி (வயது 35) ஆகிய இருவமே, நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் தப்பிச் சென்ற இருவரையும் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
கண்டி-நுவரெலியா பிரதான வீதியில், வெதமுல்ல தோட்டப் பகுதியில் வைத்து, வீதியைக் கடக்கமுயன்ற கர்ப்பிணிப் பெண்ணொருவர் மீது, கடந்த 28ஆம் திகதியன்று லொறியொன்று மோதியதில் அப்பெண், ஸ்தலத்திலேயே பலியானார்.
லொறியின் சாரதி, கைதுசெய்யப்பட்டார். இதேவேளை, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள், லொறியை புரட்டிவிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago