2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வீதிகளில் மண்: பாதசாரிகளின் பாதங்களில் பிசுபிசுப்பு

Kogilavani   / 2016 ஜூலை 01 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன்-டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதியில், வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிப்பதற்காக வெட்டப்படும் மண் திட்டிலிருந்து அகற்றப்படும் மண், ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் கொட்டப்படுவதால் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் மழை காலத்தில் வீதியானது சேறும் சகதியும் நிறைந்து காணப்படுவதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.  

ஹட்டன் நகர், டன்பார் விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் பிரதான வழியின் அருகிலே மேற்படி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இக்கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக மண் திட்டிலிருந்து வெட்டப்படும் மண்ணானது, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதி, மல்லியப்பூ சந்தியிலிருந்து செனன் வரையிலான பாதையோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றது.  

இதுதொடர்பில் ஹட்டன் நகரசபை செயலாளர் எஸ்.பிரியதர்சினியிடம் கேட்டபோது, 'நகரசபைக்குச் செந்தமான மேற்படி இடமானது, நகரசபையின் முன்னாள் தலைவரினால் தனியார் ஒருவருக்கு சட்டபூர்வமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. சூழல் பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றே மேற்படி வர்த்தக நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது' என்றார்.

வீதியில் மண்கொட்டுவது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவ் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .