Sudharshini / 2015 டிசெம்பர் 27 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

காஞ்சன குமார ஆரியதாஸ, மொஹொமட் ஆஸிக்
மாத்தளை, லக்கலை கிராமிய வைத்தியசாலையில் பணியாற்றி வந்த வைத்தியர்கள் இருவர், கடந்த 24ஆம் திகதி முதல் வைத்தியசாலைக்குச் சமூகமளிக்காததால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்க்கொண்டுள்ளதுடன் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த 30பேர் சுகயீனமுற்ற நிலையிலே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24ஆம் திகதி முதல் வைத்தியர்கள் இருவரும் கடமைக்குச் சமூகமளித்திருக்கவில்லை என தெரியவருகிறது.
இந்நிலையில், இன்று ( 27) வைத்தியர் ஒருவர் மட்டும் கடமையிலிருந்ததாக தெரியவருகிறது. சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள், வைத்தியர்கள் இன்மையால் மிகுந்த சிரமத்துடன் வீடு திரும்பியதாக தெரியவருகிறது.
வைத்தியசாலையின் தொலைப்பேசி இலக்கத்துக்கு நேற்று தொடர்புகொண்டு கேட்டபோது, வைத்தியர் ஒருவர் மட்டுமே கடமையில் இருப்பதாகவும் அவசர சிகிச்சை பிரிவுக்கு மட்டுமே நோயாளர்கள் அனுமதிக்கப்படுவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago