Sudharshini / 2016 பெப்ரவரி 08 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, இராமசந்திரன்
ஹட்டன் நோக்கி சென்றுகொண்டிருந்த வான் ஒன்று, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி 15 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவரும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து ஞாயிற்றுக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளதென வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே இவ்விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இருவரும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

19 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
49 minute ago
1 hours ago