2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; மூவர் படுகாயம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன், பா.திருஞானம்

இறம்பொடை, கல்லுக்குழி பகுதியில்  இன்று(16) முற்பகல் முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  மூவர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனெல்லையை சேர்ந்த மொஹொமட் நிஸ்ராஸ் என்ற 17 வயது சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்த சிறுவர்கள் இருவரும் பெண்ணொருவரும் காயமடைந்துள்ளனர்.

மேற்படி நால்வரும் முச்சக்கரவண்டியில் மாவனெல்லையிலிருந்து வெளிமடைக்கு மரண வீடொன்றுக்காக சென்றுவிட்டு மீண்டும் மாவனெல்லைக்கு திரும்புபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .