Niroshini / 2016 மே 07 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்
பதுளை-கொழும்பு வீதியில் பண்டாரவளை கொலத்தன்ன பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் லொறி ஒன்று கார் மற்றும் முச்சக்கரவண்டியோடு மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் லொறி சாரதி காயமடைந்துள்ளார்.
பதுளை கொழும்பு வீதியில் பண்டாரவளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை எல்லதொட்ட பகுதியில் லொறியொன்று வேக கட்டப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த கார் மற்றும் முச்சக்கரவண்டியோடு மோதி சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்து சென்று அருகில் இருந்த புகையிரத கடவைக்கு முன்னால் இருந்த படலையை உடைத்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் கொழும்பு பதுளை ரயில் சேவை பல மணி நேரங்கள் இடை நிறுத்தி வைக்கப்பட்டது. இவ்விபத்தில் லொறி சாரதி காயமடைந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago