Kogilavani / 2015 நவம்பர் 17 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன், டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் நேற்று (16) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹட்டனிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதி, டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் பிரதான வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதியும் படுங்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




9 minute ago
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
19 Apr 2026