Kogilavani / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன், எம்.செல்வராஜா
ஆலய முன்றலில் வாயிற்கதவு அமைப்பது தொடர்பில் ஏற்பட்ட இன முறுகல் காரணமாக, ஊவா பரணகமை பிளேலெமன்ட் ரத்னோதாகம மக்கள், இன்றுத் திங்கட்கிழமை முதல் பணிபகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளதுடன் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தோட்ட மக்கள், ஊவா பரணகமை ரத்னோதாகம முருகன் ஆலயத்தின் பாதுகாப்புக் கருதி வாயிற்கதவை அமைக்க முற்பட்டப்போது, பெரும்பான்மையின மக்களுக்கும் ஆலய நிர்வாகத்துக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
வாயிற்கதவு அமைக்கப்படுவதால் வீதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பெரும்பான்மையின மக்கள் தெரிவிக்க, ஆலய நிர்வாகத்தின் அதனை மறுக்கவே இருசாரருக்குமிடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டது.
இந்நிலையில், தமக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தரும் வரையில் தாம் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடப்பபோவதில்லை என பிளேலெமன்ட் தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026