Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மார்ச் 09 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜா
மத்தியக் கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், புலம்பெயர் தொழிலாளர்களாக பணிபுரியும் தொழிலாளர்கள், “புலம்பெயர் அபிவிருத்திப் பங்களார்” என அழைக்கப்பட வேண்டும் என்று, பிரிடோ நிறுவனம் முன்வைத்த ஆலோசனைக்கு, அனைத்து நிறுவனங்களினதும், அங்கிகாரம் கிடைத்துள்ளது.
இது தொடர்பில், பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் மேலும் கூறுகையில்,
“நாட்டில், அந்நிய செலாவணியின் தொகை, தற்போது 7.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இதுவே, இந்த நாட்டுக்கு தற்போது வெளிநாட்டு செலாவணியை கொண்டுவருவதில் முதலிடத்தில் இருக்கும் தொழிற்றுறையாகும்.
நாட்டில், வரவு -செலவுத்திட்டத்தை தயாரிக்கும்போதுங்கூட, இந்த தொழிற்றுறையே, முக்கியத்துறையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை, அண்மையில் அமைச்சர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
வெளிநாட்டு செலாவணியை கொண்டுவரும் இந்தத் துறை, பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
அத்தோடு, சுமார் 20 இலட்சம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் சென்றிருக்கும் நிலையில், அவர்கள் உள்நாட்டில் வேலையில்லாப் பிரச்சனையை தீர்ப்பதிலும் பாரிய பங்களிப்பை செய்கின்றார்கள்” என்றார்.
10 minute ago
29 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
29 minute ago
44 minute ago
1 hours ago