Kogilavani / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிமாவட்ட மாணவர்களுக்கு இறுதி நேரங்களில், அனுமதி வழங்கி, அம்மாணவர்களையும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதி வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலையொன்றின் அதிபரொருவர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று, கல்வி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது,
'இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு மத்திய மாகாண கல்விப் பணிப்பாளருக்கு, பரீட்சைகள் ஆணையாளர் ஊடாக நான் பணிப்புரை விடுத்திருந்தேன். அதற்கு அமைய நுவரெலியாவில் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து பாடலையொன்றின் அதிபரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் என்று மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் என்னிடம் தெரிவித்துள்ளார்' என்றார்.
22 minute ago
37 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
52 minute ago