Kogilavani / 2021 ஏப்ரல் 07 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா-வெலிமடை பிரதான வீதி, ஹக்கலை பகுதியில் இம்மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய சாரதியை, எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் திருமதி லுசாகா தர்மகீர்த்தி, நேற்று முன்தினம் (6) உத்தரவிட்டார்.
மேற்படி வீதியில் கடந்த 1ஆம் திகதி ஓட்டோவொன்றின் மீது கொள்கலன் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டோவில் பயணித்த மூன்று பெண்கள் உடல் நசுங்கி பலியாகினர். ஓட்டோவின் சாரதி பலத்தக் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வருகின்றார்.
இச்சம்பவத்தையடுத்து கொள்கலனின் சாரதி தப்பிச் சென்றிருந்த நிலையில், திங்கட்கிழமை (5) மாலை அவரை கைதுசெய்த பொலிஸார், நேற்று முன்தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago