Editorial / 2025 ஒக்டோபர் 19 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.ஹேவா,சுஜிதா
“அனைவருக்கும் சமாதானம் மற்றும் சுபீட்சத்தை விரும்பி” எனும் தொனிப்பொருளில் பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய தீபாவளி விழா ஹட்டனில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது.
பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும செனவி தலைமையில் இடம்பெற்ற இந்த தேசிய தீபாவளிப் பெருவிழாவின் பிரதான பூஜைகள் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இந்துக் கோவிலில் தலைமைக் குரு சன்மதுர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பௌத்த மத அலுவல்கள் மற்றும் கலாசார பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுளா சுரவீர, கிருதஷ்ணன் கலைச்செல்வி, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், ஹட்டன் டிக்கோயா நகர தலைவர் கருணாரத்ன மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தேசிய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார ஊர்வலம் ஹட்டன் ஸ்ரீசா மாணிக்கப்பிள்ளையார் தேவாலயத்திற்கு எதிரில் இருந்து ஹட்டன் பிரின்ஸ் மண்டபம் வரை சென்றது.







28 minute ago
33 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago
55 minute ago
1 hours ago