Editorial / 2017 ஜூன் 17 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதியில் தேங்கிக்கிடக்கும் 50 டொன் குப்பைகளை கொட்டகலை (Clf) காங்கிரஸ் தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் கொட்டுவதற்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பத்தனை பகுதியில் குப்பைகளை கொட்டுவதக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே, இன்று காலை கொட்டகலை காங்கிரஸ் தொழில் பயிற்சி வளாகத்தில் குப்பைகள் கொட்டப்பட்டன.
கடந்த மூன்று மாத காலமாக நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகரின் ஆங்காங்கே தேங்கிக்கிடந்த நிலையில் நகரில் துர்நாற்ற வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டதுடன், நகருக்கும் வருவோர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இவ்வாறு தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றக்கோரி ஹட்டன் நகர வர்த்தகர்கள் கடைகளை அடைத்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை கடந்த வியாழக்கிழமை 15ஆம் திகதி முன்னெடுத்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு வருகைத்தந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பத்தனை பகுதியில் தற்காலிகமாக குப்பைகளை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, தெரிவித்ததன்பின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதுடன், ஹட்டன் நகரசபையினால் வாகனங்களினூடாக பத்தனை பகுதிக்கு குப்பைகளை கொண்டு செல்லப்பட்டன.
எனினும், பத்தனை பகுதியில் குப்பைகளை கொட்ட அனுமதிக்க முடியாது என அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பத்தனை பொலிஸ் நிலையத்திலும் குப்பைகளை கொட்ட அனுமதிக்க முடியாது என முறைப்பாடொன்று செய்துள்ளனர்.
இந்நிலையில், ஹட்டனில் இருந்து பத்தனைக்கு கொண்டு செல்லப்பட்ட குப்பைகள் மீண்டும் ஹட்டனுக்கு கொண்டு வரப்பட்டது.
இவ்வாறான நிலையில், சுகாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள ஹட்டன் நகரவாசிகளின் நலன் கருதி கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில், தனது கட்சி காரியாலத்துக்கு அருகில் பாரிய குழி தோண்டி ஹட்டன் - டிக்கோயா நரசபைக்குட்பட்ட பகுதிகளில் தேங்கிக்கிடைக்கும் 50 டொன் குப்பைகளை புதைக்க தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஹட்டன் - குடாகம பகுதியில், குப்பைகளை கொட்டுவதற்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஹட்டன் நீதிமன்றத்தால் அப்பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு தடையத்தரவு பிரப்பிக்கப்பட்டது. கடந்த 3 மாத காலமாக குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லாத நிலையில் வேறு இடமொன்றை தெரிவு செய்வதில் இழுபரி நிலை ஏற்பட்டுள்ளது.
நகரப்பகுதிகளில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை சீ.எல்.எப் வளாகத்தில் குழிதோண்டி புதைக்கை நடவடிக்கை எடுத்துள்ளதுடன், விரைவில் நிரந்தர இடமொன்றை பெற்றுக்கொடுப்போம் என்றும் தொண்டமான் தெரிவித்தார்.
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago