Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான ஹட்டன் டிப்போவுக்கு, 67 இலட்சம் ரூபாய் இலாபம் கிடைத்துள்ளது என, டிப்போ பரிசோதகர் ரோஹண டி சில்வா தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (1) முதல் திங்கட்கிழமை வரையான தொடர் விடுமுறை காரணமாக, ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தமையே, இந்த இலாபத்துக்குக் காரணம் என அவர் கூறினார்.
விடுமுறை நாள்களில் வந்த பயணிகளின் நன்மை கருதி, 80 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன என்றும் சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்காக, நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து, அதிகளவான பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
பயணிகளின் நலன்கருதி, கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயாவுக்கு, விசேட ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது என்றும் ரயில்களில் பெருந்தொகையான பயணிகள், ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு வருகை தந்தனர் என்றும் கூறிய அவர், ரயில்களில் வருகைத்தந்த பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக, ரயில்களின் வருகைக்கேற்ப, விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன என்றும் தெரிவித்தார்.
12 minute ago
25 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
29 minute ago
1 hours ago