2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ஹட்டன் – பொகவந்தலாவை வீதிக்கு பூட்டு

Editorial   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 01:30 - 1     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் , நிலத்தாழிறக்கம் ஏற்பட்டுள்ளமையால், குறித்த வீதியின்  போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர் .

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம பிரதேசத்தில் உள்ள பிரதான  வீதியில்  வெடிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே, இன்று (13) பகல் முதல் வீதி போக்குவரத்தை  பொலிஸார் தடை செய்துள்ளனர் .

கடந்த வாரம், காசல்ரி நிர்தேக்கத்தை அணிமித்த நிவ்வெளிகம பகுடியிருப்பு பகுதியில், நிலம் தாழிறக்கம் ஏற்பட்டமையால், ஐந்து குடியிருப்புகளைச் சேர்ந்த 25 மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், பொகவந்தலாவ - ஹட்டன் பிரதான வீதியியிலும் பாரியவெடிப்புகள் ஏற்பட்டுள்மையால், குறித்த வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.

பாதை மூடப்பட்மையால், ஹட்டன்,  பலாங்கொடை, பொகவந்தலாவை, மஸ்கெலியா, ஒல்ட்டன், சாமிமலை பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாக தடைப்படுள்ளது.

அத்துடன், வாகான சாரதிகள்  மஸ்கொலியா ஊடாக நோட்டன் பாதையையும் சாஞ்சிமலை வழியாக டிக்கோயா பாதையையும்  போக்குவரத்துக்கான பயன்படுத்துமாறு, நோர்வூட்  பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


  Comments - 1

  • Ramesh vero Saturday, 13 October 2018 01:02 PM

    We need urgently new road arrange for our people

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .