Kogilavani / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
ஹட்டன் பஸ் தரிப்பிடத்தை புனரமைக்கும் பணிகள், நேற்று (29) முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதால், பயணிகளின் அசௌகரியங்களை குறைக்க பிரதான வீதியின் ஓரமாக அரச மற்றும் தனியார் பஸ்களை தரித்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ், இத்தரிப்பிடம் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இத்தரிப்பிடத்திலே அரச மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் தரித்து நிற்பதால் பயணிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
புனரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்படும் என்பதாலும் பயணிகளை அசௌகரியத்துக்கு உள்ளாக்கக்;கூடாது என்பதாலும் தற்காலிகமாக, பஸ்களை ஹட்டன் பிரதான வீதியின் ஓரத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான ஒழுங்குகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago