Gavitha / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

- மு.இராமசந்திரன்
தோட்டப்புற பாடசாலைகளுக்குக் கற்றல் உபகரணங்கள், தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளுக்கு, 7 இலட்சம் ரூபாய் பெருமதியான பச்சைபலகைகள் 20 வழங்கி வைக்கும் நிகழ்வு, கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு, 'தமிழ் முற்போக்கு கூட்டணியின் மக்கள் சந்திப்பு மன்றம்' எனும் தொனிப்பொருளில் ஹட்டன் கிருஷ்ணபவன் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(19) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர், "மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர், மறைந்த பெ.சந்திரசேகரன் காட்டிய வழியில், மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைத் தீர்ப்பது தொடர்பில் மக்கள் மன்றம் கவனஞ்செலுத்துகின்றது. இச்செயற்பாடானது, மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் முன்னெடுத்துச் செல்லப்படும்," என்றார்.
இந்நிகழ்வில்,கல்வி நடவடிக்கைகள், தொழில்வாய்ப்பு அத்தியவசியத் தேவை பிரச்சினைகள் தொடர்பிலும் மலையக மக்களிடையே காணப்படும் பல்வேறு பிரச்சினை தொடர்பிலும் இம்மக்கள் சந்திப்பின் மூலம் கண்டறியப்பட்டது. மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர். ராஜாராம், மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் ஏ.லோரன்ஸ் உட்படப் பலரும் கலந்துகொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




23 minute ago
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
1 hours ago