Kogilavani / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்
ஹட்டன் நகரிலுள்ள எரிபொருள் நிறப்பு நிலையத்துக்கு அருகில், நேற்று(14) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சலங்கந்தையிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பஸ்ஸும் ஹட்டனிலிருந்து டிக்கோயா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில், முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து பஸ் மற்றும் முச்சக்கர வண்டியை பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் பஸ்ஸின் சாரதியிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


19 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
1 hours ago