2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஹப்புத்தளையில் இருவருக்குத் தொற்று

Gavitha   / 2021 மார்ச் 01 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

ஹப்புத்தளை பொது சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என, பொது சுகாதாரப் பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார்.

ஹப்புத்தளை நகரின் பிரபல ஹோட்டல் விடுதியொன்றின், 25 வயதுடைய ஊழியர் ஒருவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவருக்கு தொற்று உறுதியானது என்றும் அந்த விடுதி தொற்று நீக்கப்பட்டு, 14 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அந்த விடுதியில் பணியாற்றிய 16 பேரும், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில், மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 68 வயதுடைய நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விருவரும், கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .