2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

ஹரிஸ்பத்துவயில் 7 வீதிகளுக்கு காபட் இடும் பணிகள் ஆரம்பம்

Gavitha   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

ஹரிஸ்பத்துவ தேரத்ல தொகுதிக்குட்பட்ட ஏழு பிரதான வீதிகளை காபட் இட்டு செப்பனிடும் வேலைத்திட்டம் நாளை சனிக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளது.

தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களின் அழைப்பின் பேரில், பல்கலைகழகங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் இந்த வைபவம் இடம்பெறவுள்ளது.

முதலாவதாக, பூஜாபிட்டிய போத்தொட்ட வீதி காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்க உள்ளதுடன், அதனைத் தொடர்ந்து கரடுவாவல வீதி காலை 11 மனிக்கும், பூஜாபிட்டிய அத்தரகம வீதி நண்பகல் 12 மணிக்கும், கசாவத்தை பூஜாபிட்டிய வீதி பிற்பகல் 2 மணிக்கும் , அக்குறணை மல்வானஹின்ன நீரெல்ல வீதி பிற்பகல் 3 மணிக்கும் , விலான வட்டகொடை வீதி மாலை 4 மணிக்கும், பொக்காவல மீலியத்த வீதி மாலை 5 மணிக்கும் காபட் இட்டு செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .