2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

ஹோட்டல் அறையிலிருந்து தொழிலதிபரின் சடலம் மீட்பு

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

கதிர்காரமத்திலுள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து, துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில், தொழிலதிபர் ஒருவரின் சடலத்தை, கதிர்காமம் பொலிஸார், இன்று (23) காலை மீட்டுள்ளனர்.

மொனராகலை, பகினிகாவெலயைச் சேர்ந்த கே.எம்.சமந்த கோணார (வயது 47) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் தங்கியிருந்த அறையிலிருந்து, நேற்று (23) அதிகலை 2 மணியளவில் துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டதாகவும் விடுதி ஊழியர்கள் சத்தம் கேட்ட அறையை, ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, மேற்படி நபர் சடலமாகக் கிடந்ததாகவும் தெரியவருகிறது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளதுடன், சடலத்தை மீட்டுள்ளனர்.

மரணம் குறித்து, கதிர்காமம் நீதவான் நீதிமன்ற நீதவான் கிறிசாந்த அபேசிங்க, ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை ஹம்பாந்தோட்டை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி, சட்ட வைத்திய அறிக்கையைப் பெற்று, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, கதிர்காமம் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மேற்படி நபர், ஐந்து நாள்களுக்கு முன்னர், குறித்த அறையில் தங்குவதற்காக வந்திருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .