2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

ஹாலிஎல நகரில் பொலிஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை

Sudharshini   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, ஹாலிஎல நகரில் பொலிஸ் நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹாலிஎல தொகுதி அமைப்பாளருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

'ஹாலிஎலயில் தற்போது பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றே இயங்கி வருகின்றது. இந்த சோதனை சாவடியை அகற்றி நிரந்ததமாக பொலிஸ் நிலையமொன்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

'ஹாலிஎல நகரில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் அஞ்சல் அலுவலக கட்டடத் தொகுதியின் ஒரு பகுதியிலேயே, இந்த பொலிஸ் நிலையம் அமையவுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .