Editorial / 2017 ஜூன் 04 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்
“மலையத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க கூடிய தொழில் பயிற்சி வேலைத்திட்டங்களை, மலையத்துக்கு இந்தியா கொண்டு வரவேன்டும்” என, கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்திய உதவியுடன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 4,000 வீடுகள் அமைப்பதற்கான செயற்றிட்டத்தில், இறம்பொடை - ஹெல்பொட தோட்டத்தில் 100 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று (03) நடைபெற்றது. இதன்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், 2009ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 50 ஆயிரம் வீடுகளை தந்தது. அதில் மலையகத்துக்கு 4,000 வீடுகள் கிடைத்தன. இந்த வீடுகளை அமைப்பதற்கு அப்போது இருந்த அமைச்சுகள் முன்வரவில்லை. அதனால் பல இழுப்பறி நிலைகள் காணப்பட்டன.
தற்போது நல்லாட்சியில் அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதனால் மலையகத்தில் அனைத்து இடங்களிலும் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
மேலும், “இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவை அழைத்து வரும் வழியில் இந்த தோட்டத்தின் விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அழைத்துச் சென்றேன்.
அவர் மலையக மாணவர்கள் கஷ்டத்தின் மத்தியில் கல்வி பயில்வதை நேரடியாக பார்த்தார். எதிர்காலத்தில் இந்த பாடசாலைகளின் அபிவிருத்திக்கும் அவர் உதவி செய்ய வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago