2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

30 அடி பள்ளத்தில் குடை சாய்ந்த டிராக்டர்

Princiya Dixci   / 2016 மே 07 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஐ. சுஜிதா

தலவாக்கலை - விந்துல பிரிவுக்குட்பட்ட வோர்க்கஸ் வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடொன்றின் மலசலகூடக்  கழிவுகளை ஏற்றச் சென்ற டிராக்டர் 30 அடி பள்ளத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இன்று சனிக்கிழமை (07) காலை 11.45க்கு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

டிராக்டரைத் திருப்ப முனைந்த போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக இவ்விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். 

இந்த விபத்து தொடர்பாக தலவாக்கலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .