Kogilavani / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
வெளிமாவட்ட மாணவர்களை, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இறுதி நேரத்தில் அனுமதித்தமை தொடர்பில் அதிபர்களை விசாரணைக்கு உட்படுத்துவது போல, அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'நான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குறித்த கல்வி வலயமொன்றுக்குச் சென்று, வலயக் கல்விப்பணிப்பாளரிடம் நீண்ட பட்டியலை கையளித்தேன். அந்த பட்டியலில் வெளிமாவட்ட மாணவர்கள் தொடர்பாக அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டிருந்தேன் ஆனால், குறித்த அதிகாரி இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளையோ அல்லது விசாரணகளையோ முன்னெடுக்கவில்லை.
இந்த விவகாரத்தை அவர்களும் கண்டும் காணாதது போலவே நடந்து கொண்டார்கள். அப்படியானால் அந்த அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
எனவே அதிபர்களை மாத்திரம் விசாரணக்கு உட்படுத்தாமல் அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்தி அவர்கள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
25 minute ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
13 Apr 2026