2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

200 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2016 ஜூன் 17 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

கேகாலை, அரநாயக்க பிரதேசத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மாணவருக்கும் உதவுமுகமாக சிங்கப்பூர் இளைஞர் அமைப்பின் மூலம் 200 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்; என்பன நேற்று(16) அரநாயக்க அத்கம்பொல வித்தியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

மேற்படி பிரதேசத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 500 பேருக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் உட்பட ஏனைய தேவையான பொருட்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிங்கப்பர் இளைஞர் அமைப்பின் போசகர் கரந்தெட்டியன குணரத்ன ஹிமி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபியதர்ஷன யாப்பா, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், முன்னாள்; அமைச்சர் லலித் திசாநாயக்க மற்றும் சிங்கப்பூர் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .