Kogilavani / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபடுகின்ற 10,000 இளைஞர்களுக்கு, விவசாயதுறையில் பயிற்சிகளை வழங்கி விவசாயத்துறையில் அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதப்பாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கேற்ப, மத்திய மாகாண விவசாய அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பில் மேலும் கூறிய அவர், 'மலையக இளைஞர்களுக்கு இவ்வாறான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதனூடாக அவர்களை அனைத்து துறைகளிலும் ஈடுபடுத்த முடியும். அவர்களுக்கென சுயதொழில் உருவாகும். அடுத்த வாரப்பகுதியில் தோட்டப் பகுதி இளைஞர்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவார்கள்' என்றார்.
'மலையகத்தில் பல தோட்டங்களில் விளையாட்டு மைதானங்களை அமைப்பதற்கு இளைஞர்கள் எங்களிடம்; கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அதற்கிணங்க, கடந்த சில வருடங்களாக அதற்கான நிதியொதுக்கீடுகளை மேற்கொண்டு விளையாட்டு மைதானங்களை அமைத்து வருகிறோம்.
அதேபோல், எதிர்காலங்களிலும் இவ்வாறான மைதானங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம். கடந்த வருடம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் 500 விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.
எமது இளைஞர்கள் விளையாட்டுத்துறையிலும் முன்னேறி சாதனை படைக்கவேண்டும் என்பது எமது ஆவலாக உள்ளது. அதற்கான உதவிகளை செய்வதற்காக நான் தயாராக உள்ளேன்' என்றார்.
6 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
13 Apr 2026