Sudharshini / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திர விராஜ் அபயசிறி
மாத்தளை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் சுகாதார பிரிவினர் 21, 22, 23ஆம் திகதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், 10 கடைகள் மூடப்படடுள்ளதோடு 30 கடைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனித பாவனைக்கு பொருத்தமற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தல், ஆரோக்கியமற்ற உணவு தயாரிப்பு ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கடைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி 30 கடைகளின் உரிமையாளர்களையும் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சுகாதார அதிகாரிகள் பணித்துள்ளனர்.
இதேவேளை, வீதியோரங்களில் இருந்த 10 உணவகங்களும்; 4 ஆரோக்கிமற்ற மீன் விற்பனை நிலையமும் மூடப்பட்டுள்ளன.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026