Niroshini / 2016 ஜூன் 02 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி
அமைச்சர் கபீர் ஹாசிமின் வேண்டுகோளுக்கிணங்க, தெல்தொட்டை ஜம்மிய்யதுல் ஹைரிய்யா இஸ்லாமிய அமைப்பின் ஏற்பாட்டில், கேகாலை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரவன்வெல்ல மற்றும் கொட்டியாகும்புர மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு,கரவன்வெல்ல மற்றும் கொட்டியாகும்புர பள்ளிவாசல்களில் திங்கட்கிழமை (31) நடைபெற்றது.
டுபாய் நாட்டைச் சேர்ந்த அஹமட் கலப் இஸ்மாயீல் அவர்களின் நிதி உதவியின் கீழ் இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் அரசி 10 கிலோகிராம், பால் மா, பருப்பு, சீனி, தேயிலை, பேரீச்சம்பழம், உப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. தலா 3,500 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகள் 100 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், டுபாய் நாட்டைச் சேர்ந்த அஹமட் கலப் இஸ்மாயீல் தெல்தொட்டை ஜம்மிய்யதுல் ஹைரிய்யா இஸ்லாமிய அமைப்பின் தலைவர் முனீர் சாதீக், அமைச்சர் கபீர் ஹாசிமின் பிரதிநிதி அபூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

27 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
4 hours ago
4 hours ago