2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு பழைய மாணவர்களுக்கு அழைப்பு

Kogilavani   / 2016 மே 08 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மொஹொமட் ஆஸிக்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1981-82ஆம்  வருடம், கலைப்பிரிவில் கல்வி பயின்ற மாணவர்;களது ஒன்றுகூடல் எதிர்வரும் 28ஆம் திகதி பேராதனையில் இடம்பெற உள்ளது.

குறிப்பிட்ட கல்வியாண்டில் கல்விப் பயின்ற மாணவர்கள் தமது குடும்பம் சகிதம்  இவ் ஒன்றுகூடலில் கலந்துகொள்ள முடியுமென ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

ஒன்றுகூடலில் பங்குபெற விரும்புவோர்  எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர்;,  எம்.ஜிப்ரி(காலி) 071- 8376434, ஏ.எச்.எம்.சம்சுதீன்(துன்துவ)- 072-4753437, எம்.ஏ.சி.உதுமான்(கண்டி)- 071-8222455, எம்.எம்.ஹம்சா(ஹம்பாந்தோட்டை) 071-8031419, திருமதி நஸீரா ஜெக்கீம் -(ஹம்பாந்தோட்டை)071-8123287, ஜே.எம்.ஹாபீஸ் (மடவளை)- 071-7629532 ஆகிய அலைபேசி இலக்கங்களில் ஏதேனும் ஓர் இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 35 வருடங்களுக்கு பின்னர் இவ் ஒன்றுகூடல் இடம்பெறுவதாகவும் தவறாமல் இதில் கலந்துகொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .