Kogilavani / 2016 மே 04 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் ஒன்றுக்காக அமைக்கப்பட்ட பணிமனை, பொருத்தமான இடத்தில் அமைக்கப்படவில்லை எனவும் அதனை பொருத்தமான இடத்தில் அமைப்பதற்கு மத்திய மாகாண முதலமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கூறினர்.
'உலக வங்கியின் நிதியுதவியில் ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் ஒன்றுக்காக பன்மூர் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள கோட்டக்கல்விப் பணிமனை பொருத்தமற்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், 43 பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் பல்வேறு இடையூறுகளை எதிர்நோக்கி வருகின்றனர்' எனவும் அவர் கூறினார்.
மத்திய மாகாண சபை அமர்விலே அவர் இதனை கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,
'ஹட்டன் நகரிலிருந்து போக்குவரத்து வசதிகளற்ற பிரதேசத்தில் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டமை தொடர்பில் சிலர் விதண்டாவாதக் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பிலும் முதலமைச்சர் கவனத்தில் எடுத்துக்கொண்டு, ஹட்டன் கல்வி வலயத்துக்கான பணிமனையைப் பொருத்தமான இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க, 'ஹட்டன் கோட்டம் ஒன்றுக்கான கல்விப் பணிமனை உரிய இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
10 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago