Kogilavani / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ரமேஷ்
2015ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இம்மாதம் 28 ஆம் திகதி வரை, தலவாக்கலை லிந்துலை நகரசபையில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் நகர் மற்றும் கிராம பிரதேசங்களில்; அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர சபையின் செயலாளர் அஜித் புஸ்பகுமார, நேற்று(28) தெரிவித்தார்.
நகரசபை அபிவிருத்தி பணிகளுக்காக அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் ஊடாக நிதிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பஸ் தரிப்பு நிலையம், நவீன சந்தை கட்டடத் தொகுதி, வடிக்கால் அமைப்பு, கடைத்தொகுதி அமைப்பு, நகர சபைக்கு உள்ளடங்கப்பட்ட பெருந்தோட்ட பகுதிகளில் வீதி அமைப்பு போன்றவற்றை அபிவிருத்தி செய்வதற்காகவே இந்த 400 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கட்டட நிர்மாணப் பணிகள் தொடர்பான நகரசபை பிரிவின் ஊடாக 95 இலட்சத்து 60 ஆயிரத்து 87 ரூபாய் 78 சதத்துக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இது இவ்வாறிருக்க தலவாக்கலை-லிந்துலை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாண்டு ஆரம்பம் முதல் இதுவரை 23 சட்டவிரோத கட்டட நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் 2015ஆம் ஆண்டுக்கு கட்டட விண்ணப்பம் செலுத்தியவர்கள் 65 பேரும் சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள் 14 பேரும் இருப்பதாக நகர சபையின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
28 minute ago
40 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
40 minute ago
58 minute ago