Niroshini / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சுஜிதா
வட்டவளை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட வோல்ட்ரீம் தோட்ட வைத்தியசாலை குறைபாடுகளுடனேயே இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை உடனடியாக நிவர்த்தி செய்து தருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் தெரிவித்தார்.
மேலும் தோட்ட வைத்தியசாலைகளில் பணியாற்ற கல்வி சுற்ற மலையக யுவதிகள் முன்வருவதில்லை. காரணம் 3 வருடங்கள் பயிற்சியின் பின்பே சேவையில் நிரந்தரமாக்கப்படுவர் என்பதனாலேயே இவ்வாய்ப்பை பெரும்பான்மை இனத்தவர்கள் தட்டிச் செல்கின்றனர். இதனாலேயே மொழி பிரச்சினை ஏற்படக் காரணம்.
இருப்பினும் இன்னும் ஒரு சில தினங்களில் நுவரெலியாவுக்கு வரவிருக்கும் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளரின் கவனத்துக்கு குறித்த பிரச்சினைகளை நேரடியாக முன்வைப்பதனூடாக நிரந்தர தீர்வொன்றை பெற்று தர முடியும் என்று அவர் மேலும் கூறினார்.
மெராயா, கெளலினா டிவிசன்களை சேர்ந்த கர்ப்பினிப் பெண்கள் ஹென்போல்ட் வைத்தியசாலையில் சிகிச்சைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
31 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
8 hours ago