2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிளாஸ்கோ தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2017 மார்ச் 08 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்

தோட்ட வைத்தியரை இடமாற்றக்கோரி, நானுஓயா, கிளாஸ்கோ தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக, நேற்றுக் காலை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நோயாளர்களின் விடயத்தில், தோட்ட அதிகாரி, அசமந்தப்போக்குடன் நடந்துகொள்வதாகவும் இதனால், தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, தோட்ட வைத்தியரை இடம்மாற்றிவிட்டு, புதிய வைத்தியரை நியமிக்குமாறு கோரியே, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞனொருவன், கடந்த 5 ஆம் திகதி, ஆற்றில் குளிக்கச் சென்றபோது, சுழியில் அகப்பட்டு உயிரிழந்தார். சடலம் மீட்கப்பட்டதன் பின்னர், தோட்ட வைத்தியரை அழைத்தபோது,  வைத்தியர் சம்பவ இடத்தக்கு வருகைத் தரவில்லை.

இவ்வாறே, வைத்தியர் அடிக்கடி வெளியில் சென்றுவிடுவதாகவும், அவசர நிலைமைகளில், வைத்தியரை தேடும்போது, அவர் கடமையில் இருப்பதில்லை எனவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, மேற்படி வைத்தியர், அரசசார்பற்ற நிறுவனங்களை இணைத்துகொண்டு, தொழிலாளர்களை ஏமாற்றி கடன் வழங்கி, அதிகப்படியான வட்டி பணம் அறவிடுவதாகவும் பெற்றப்பணத்தை மீளச்செலுத்த முடியாதவர்களுக்கு எதிராக, பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்வதோடு வழக்குத்தாக்கல் செய்வதாகவும் இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்   தொழிலாளர்கள் இதன்போது கவலை தெரிவித்தனர்.

எனவே, வைத்தியரை இடமாற்றிவிட்டு புதிய வைத்தியரை நியமிப்பதற்கு, தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் இதன்போது, கோரிக்கை விடுத்தனர்.

புதிய வைத்தியர் நியமிக்கப்படும்வரை, தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் இதன்போது கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X