Kogilavani / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்
மதுபானம் மற்றும் சிகரெட்டுக்கான 'வற்' (பெறுமதிசேர்க்கப்பட்ட வரி) 90 வீதமாக அதிகரிக்கக்கோரி, நோர்வூட் போஸ்டனில் (அரிசி தோட்டம்), நேற்றுத் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மதுபானம் மற்றும் புகைத்தல் விளம்பரங்களை அம்பலப்படுத்தும் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விழிப்புணர்வு வீதி நாடகங்களும் இடம்பெற்றன.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவிக்கையில்,
'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர், சிகரெட் கம்பனிகளிடமிருந்து 90 சதவீதமான வரியை அறவிடப்போவதாக அனைத்து மேடைகளிலும் கூறி வருகின்றனர். கடந்த வாரம் அமைச்சரவையில் இது தொடர்பிலான பத்திரம் சமர்பிக்கப்பட்டதாகவும் எனினும், அதனை அமைச்சர்கள் அங்கிகரிக்கவில்லை எனவும் தெரியவருகிறது.
எனவே, இன்றைய தினம் அமைச்சரவையில் சிகரெட் கம்பனிகளிடமிருந்து 90 சதவீதமான வரியை கட்டாயமாக அறவிட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த பேரணியை நடத்துவதாக தெரிவித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
20 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
50 minute ago
1 hours ago