Sudharshini / 2016 மார்ச் 07 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி விலைபோய் விட்டதாகவும் சு.கவில் தான் நிலைத்திருக்க விரும்பவில்லை எனவும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார்.கண்டி, நுகவெலயில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ்வை சந்தித்து உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர்,
'கண்டி மாநகர சபையானது 58 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் வசமே இருந்தது. பாரிய முயற்சியின் காரணமாக அதன் அதிகாரத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வசம்பெற்றுகொள்ள முடிந்தது. ஆனால், இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலைபோய்விட்டது.
அக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிறிகொத்தாவுக்காக வேலை செய்யும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்து நிலைத்திருக்க நான் தயாரில்லை' என்றார்.
9 minute ago
20 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
28 minute ago
34 minute ago