2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

'தொழிற்சங்கங்களின் சதியே தடையுத்தறவுக்குக் காரணம்'

Kogilavani   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

'கூட்டொப்பந்தம் காலாவதியாக 18 மாதங்கள் கடந்துவிட்டன. 9 சுற்று பேச்சுக்களும் நடந்துவிட்டன. சம்பள பேச்சுவார்த்தை விடயத்தில் முதலாளிமார் சம்மேளனம் ஓர் இணக்கப்பாட்டுக்கு வராததன் காரணமாகவே, தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்' என மத்திய மாகாண அமைச்சர் எம்.ராமேஸ்வரன் கூறினார்.

'வறுமையின் கோர பிடியில் சிக்கித் திணறும் தோட்டத் தொழிலாளர்களின் நிலையை உணராத சில தொழிற்சங்கங்களின் சதித்திட்டம் காரணமாகவே, மஸ்கெலியா நகரில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கும் தடையுத்தறவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்றும் அவர் கூறினார்.

மஸ்கெலியா நகரில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம், ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தின் தடையுத்தறவுக்கமைய கைவிடப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறிய அவர்,

'தொழிலாளர் போராட்டத்தை தொழிற்சங்க போராட்டமாக காட்ட முனையும் சிலர், ஹம்பகமுவை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் தினேஸ் மற்றும்  ரவிச்சந்திரனுக்கு எதிராக தடையுத்தரவை பெற்றுகொண்டுள்ளனர். ஆனால், இந்த போராட்டம் தொழிலாளர் வர்க்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டத்துக்கு ஆதரவளிப்பது எமது கடமை.  

முதலாளிமார் சம்மேளனத்தின் உயரதிகாரிகள் கொழும்பிலிருந்துகொண்டு பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர். மாதத்துக்கு இரண்டுமுறை தோட்டப்புறங்களுக்கு வந்துச்செல்லும் உயரதிகரிகளுக்கு, தொழிலாளர் வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல் எவ்வாறு தெரியபோகின்றது' என்றார்.

'சம்பள பேச்சுவார்த்தையின் போது, 1000 ரூபாய் கோரிக்கை வைத்த நாம், இறுதி சுற்றுப் பேச்சில் சற்று கீழிறங்கி வந்தோம். ஆனாலும் 620 ரூபாயிலிருந்து 50 ரூபாயை மட்டுமே அதிகரிக்க முடியுமென கம்பனிகள் கூறிவிட்டன. அத்துடன், கிழமையில் மூன்று நாட்கள் வேலையும் ஏனைய நாட்களுக்கு கிலோ 1 க்கு 30 ரூபாய் வீதமும்; தருவதாக கம்பனிகள் தெரிவித்த நிலையிலேயே இருதி பேச்சுவார்த்தை தீர்வின்றி நிறைவடைந்தது.

கம்பனிகளின் இவ்வாறான செயற்பாட்டினால் தொழிலாளர்கள், முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .