Niroshini / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
இந்த நாட்டை சீரழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதை ஒரு காலமும் ராஜபக்ஷ குடும்பம் சம்மதிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கினிகத்தேன நகரின் பீட்டாஸ் விருந்தகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்னர் நல்ல பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக கூறியே மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் இன்று ஆட்சிக்கு வந்தவுடன் அன்று உறுதியளித்த நல்ல பல திட்டடங்களை முன்னெடுப்பதைவிடுத்து ராஜபக்ஷ குடும்பத்தை ஒழித்து கட்டுவதிலேயே கங்கணம்கட்டிக்கொண்டு செயற்படுகின்றது.
இந்த நாட்டில் எந்தவித அபிவிருத்தி திட்டங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்கள் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் ஏன் இந்த அரசாங்கத்தினை வாக்களித்து வெற்றி பெறச் செய்தோம் என அதிருப்தியடைந்துள்ளனர்” என்றார்.
“இன்று பொருளாதார ரீதியில் இலங்கை மிகவும் பின்னடைவிலே காணப்படுகின்றது. இதற்கு காரணம் இந்த நல்லாட்சி என்று கூறிக்கொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த அரசாங்கமே. இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் வாக்களித்த மக்களுக்கு பொருத்தமாக இல்லை. ராஜபக்ஷ குடும்பத்தினரை ஒழித்துக்கட்டுவதை விட்டு விட்டு வாக்களித்த மக்களுக்கு நல்ல பல திட்டங்களை முன்னெடுங்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.
20 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
50 minute ago
1 hours ago