Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 17 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-காமினி பண்டார
தங்களைக் கடனாளியாக்குகின்ற சட்டவிரோதமான நிதி வர்த்தக நடவடிக்கைகள் (பிரமிட்) மலையகத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக பெருந்தோட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மலையக மக்களையும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற மத்தியத்தர வர்க்க பிரிவினரையும் இலக்கு வைத்தே இந்த வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார ரீதியில் அதுவும் மிகக்குறைந்த காலத்துக்குள் இலட்சாதிபதியாக ஆக்கிவிடுவோம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறியே, அம்மக்களை ஏமாற்றி இவ்வாறான சட்டவிரோத வர்த்தகம் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்விதமான உடல் உழைப்பும் இன்றி மாதத்துக்கு மில்லியன் கணக்கில் சம்பாதிக்க முடியும், கஷ்டமான வாழ்க்கைக்கு குறுகிய காலத்தில் முற்றுப்புள்ளி வைக்க முடியும், ஹைபிரிட் வகை காருக்குச் சொந்தக்காரர் ஆகிவிடுவீர்கள், மாடி வீடுகளைப் பெற்று சுகபோகமாக வாழ விரும்புகின்றீர்களா? அப்படியில்லாவிடின் இப்படியே வறுமையுடன் தங்களுடைய பிள்ளைகளுடன் வாழப்போகின்றீர்களா என்ற பசப்பு வார்த்தைகளை அள்ளி வீசிகின்ற இந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்பவர்களே மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
மத்திய மாகாணத்தில் ஹட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவை, நோர்வூட் மற்றும் சாமிமலை ஆகிய பிரதேசங்களில் உள்ள பெருந்தோட்டங்களைச் சேர்ந்த மக்களை இரவு வேளைகளில் ஒன்று திரட்டி 'பொக்கெட்' மீட்டிங் நடத்தியே இவ்வாறான ஏமாற்று வேளைகளை முன்னெடுப்பதாக பாதிக்கப்பட்டோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆட்களைத் திரட்டும் இந்தக் குழுவின் உறுப்பினர்களை மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று கண்டிக்கு அழைத்துச் சென்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தெளிவுப்படுத்தும் கூட்டமொன்றையும் நடத்துகின்றனர். இதற்கென ஒவ்வொருவரிடமிருந்தும் 600 ரூபாய் அறவிடப்படுவதாக அறியமுடிகின்றது.
இவ்வாறு தெளிவுபடுத்தும் கூட்டத்துக்குச் செல்வோரின் அலைபேசி இலக்கங்களைப் பெற்று அன்றிரவே பலமுறை அழைப்புகளை ஏற்படுத்தும் அந்த நிதிநிறுவனத்தைச் சேர்ந்தோர், 63 ஆயிரம் ரூபாய் பெறுமதியானது எனக் கூறி இரண்டு பல்புகள் (மின்குமிழ்) சோலா பவர் இயந்திரம் ஆகியவற்றை விற்று விடுகின்றனர்.
தங்க நகைகள் அல்லது வாகனங்களை அடகு வைத்து இப்பொருட்களைக் எப்படியாவது கொள்வனவு செய்வோர், 63 ஆயிரம் ரூபாவை ஒரே இரவில் இழந்தது மட்டுமன்றி, கொள்வனவு செய்த பொருட்களில் இலாபத்தை திரட்டமுடியாமல் திண்டாடுகின்றனர்.
இந்த பிரமிட் வியாபாரத்தினால் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக மலையகத்தில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
11 minute ago
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
1 hours ago