Niroshini / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்
அனுமதிப்பத்திரமின்றி 25 மதுபானபோத்தல்களை கொண்டு சென்ற நபர் ஒருவரையும் மதுபானசாலை முகாமையாளர் ஒருவரையும் ஹட்டன் பொலிஸார் இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.
ஹட்டனிலிருந்து டிக்கோயா பகுதிக்கு முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றபோதே மேற்படி மதுபோத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, அதிகாலை மதுபானசாலையை திறந்து மதுபான போத்தல்களை விற்பனை செய்த மதுபானசாலை முகாமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
22 minute ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
13 Apr 2026