Sudharshini / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, ஆ.ரமேஷ்
நுவரெலியா மாவட்டத்திலுள்ள 3 கிராம வீதிகள், 900 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ள. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்; தலைமையில், இன்று (06) நடைபெற்றது.
இதன்போது, செனன் - தலவாக்கலை, நானு ஓயா- உடரகலை ஆகிய 3 வீதிகளுக்கான அடிக்கற்கள்; நாட்டப்பட்டன.
மலையகத்தில் 16 கிராம வீதிகளைப் புனரமைக்கும் வேலைத்திட்டத்துக்கமையவே இவ்வீதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ளன.
இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்;.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.இராஜாராம், சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோறன்ஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




42 minute ago
2 hours ago
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
15 Apr 2026