Sudharshini / 2016 ஏப்ரல் 05 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமோதரை பகுதியில் 9 வயது மாணவியை, வன்புணர்வுக்குட்படுத்தியதாக கூறப்படும் பி.விஜயகுமார் (34) என்ற சந்தேக நபரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (05) உத்தரவிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (04) பாடசாலையில் நடைபெற்ற மேலதிக வகுப்புக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே, மேற்படி மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபரை திங்கட்கிழமை (04) இரவு, எல்ல பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மாணவி, தற்போது தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சந்தேக நபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
9 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
33 minute ago